என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராஜா எம்.எல்.ஏ. விளையாட்டு உபகரணங்களை வழங்கிய காட்சி.
மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் பிறந்த நாளையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள்
- தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.
- சில்லிகுளம் ஆதி திராவிடர் காலனியில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வக்கீல் பெரியதுரை தலைமையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். சங்கரன்கோவில் டி.டி.டி.ஏ. மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து நவநீதகிருஷ்ணாபுரத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு பெரிய கோவிலான் குளத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து இந்திரா காலனியில் ராஜா எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் ஓடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பெரிய கோவிலான்குளத்தில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டுப் பொரு ட்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சில்லிகுளம் ஆதி திராவிடர் காலனி ராஜா எம்.எல்.ஏ. தொகுதி மேம்பா ட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
தொடர்ந்து குருக்கள்பட்டி அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள், குருக்கள்பட்டி டி.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளி மாணவ -மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கருத்தானூரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் அவைத் தலைவர் பரமையா, ஒன்றிய துணைச் செயலாளர் சின்னக்குருசாமி, சந்திர சேகரன், மாவட்ட பிரதிநிதி சண்முகப்பாண்டியன், செந்தூர்ப்பாண்டியன், பொருளாளர் முத்து ப்பாண்டியன், வர்த்தக அணி செந்தில்குமார், வக்கீல் அணி தனசேகரன், அய்யாதுரை, சங்கரன்கோவில் நகரக் செயலாளர் பிரகாஷ், இளைஞர் அணி சரவணன், முகேஷ், விவசாய தொழிலாளர் அணி குமாஸ்தா முருகன், ஆதிதிராவிடர் நல அணி ஒப்பந்தக்காரர் ராஜ் என்ற கருப்பசாமி, சிறுபான்மையின் நல அணி மரியலூயிஸ்பாண்டியன், பசுபதிபாண்டியன், வீராசாமி, மாணவர் அணி வீரமணி, வக்கீல் சதீஷ்குமார், கோ மருதப்பபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மாள், பெரியகோவிலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சைப்பாண்டியன், மலையாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், இலந்தைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், ஜெயலட்சுமி கிளைக் கழகச் செயலாளர் துரை, கருத்துப்பாண்டியன், அவை தலைவர் கணபதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






