search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சாவூர் வழியாக வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க வேண்டும்
    X

    தஞ்சாவூர் வழியாக வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க வேண்டும்

    • காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
    • இரட்டை அகல ரெயில்பாதை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் அய்யானாபுரம் நடராஜன் அனைவரையும் வரவேற்றார்.

    கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் செயலாளர் வக்கீல் வெ.ஜீவக்குமார் விளக்க உரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில், தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே அனுமதிக்கப்பட்டுள்ள, இரட்டை அகல ரெயில்பாதை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

    பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்-அரியலூர் புதிய ரெயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

    நவக்கிரக தலங்கள், சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ள தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்க வேண்டும்.

    சென்னையை போல், தஞ்சாவூர் ரெயில் நிலையங்களில் முதியோர்களை அழைத்துச் செல்லும் பேட்டரி காருக்கான கட்டணத்தை ரூ.30 லிருந்து ரூ.10 ஆக குறைக்க வேண்டும்.

    விரைவு ரெயில் என்ற பெயரில் கட்டணங்களை உயர்த்தியுள்ள ரயில்வே நிர்வாகம், கொரோனாவுக்கு முன்பு இயக்கப்பட்டது போல் பயணிகள் ரெயில் என்ற பெயரில் இயக்கி உயர்த்தப்பட்ட கட்டணங்களை குறைக்க வேண்டும்.

    தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை தரமாக நடைபெற ெரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

    நடைபெறும் வேலைகள் குறித்து அறிவிப்பு பலகையை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் சங்க நிர்வாகிகள் கண்ணன், பேராசிரியர் திருமேனி, வக்கீல்கள் உமர்முக்தர், பைசல் அகமது, உழவர் செல்ல.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×