search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முள்ளக்காட்டில் கொடை விழாவை முன்னிட்டு வடபத்திரகாளி அம்மன் சப்பரத்தில் நகர்வலம்- ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
    X

    கொடை விழாவையொட்டி நடைபெற்ற சப்பர பவனியையும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்ததையும் படத்தில் காணலாம்.

    முள்ளக்காட்டில் கொடை விழாவை முன்னிட்டு வடபத்திரகாளி அம்மன் சப்பரத்தில் நகர்வலம்- ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

    • அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்ற பின் பக்தர்களுக்கு இரவு சிற்றுண்டி வழங்கப்பட்டது.
    • 5-ந் தேதி காலை தீர்த்தக்கரை சென்று புனிதநீர் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முள்ளக்காடு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட வடபத்திரகாளி அம்மன் கோவில் கொடைவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு கடந்த 29-ந் தேதி கால்நாட்டு விழா நடைபெற்றது. 31 -ந் தேதி முதல் கொடை விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்ற பின் பக்தர்களுக்கு இரவு சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மாவிளக்கு பூஜையும், அம்மனுக்கு விசேஷ சிறப்பு பூஜைகளும், திங்கட்கிழமை அம்மனுக்கு மாகாப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.

    தொடர்ந்து 5-ந் தேதி காலை நையாண்டி மேளத்துடன் தீர்த்தக்கரை சென்று புனிதநீர் எடுத்து வருதல், நையாண்டி மேளத்துடன் வாடிப்பட்டி பழனிசாமி தம்பா மேலத்துடன் செண்டா மேளத்துடன் அம்பாளுக்கு ஓமகுண்ட பூஜையம் சிறப்பு அபிஷேகங்களும் விசேஷ தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இரவு வில்லிசை, கரகாட்டமும், ராஜா ராணி ஆட்டமும தொடர்ந்து நேமிசம் முளைப்பாரி எடுத்து வருதல், இரவு 10 மணிக்கு அம்பாளுக்கு விசேஷ தீபாராதனைக்கு பின்னர் இரவு 12.5 மணிக்கு 4 வகையான மேள தாளங்களுடன் வானத்தில் வர்ணஜாலம் காட்டும் கண்கவர் வானவேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை 7 மணி வரை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு பொங்கலிடுதல், 11 மணிக்கு மஞ்சள் நீராடுதலுடன் விசேஷ பூஜை, பகல் 12 மணிக்கு முளைப்பாரி கரைத்தலுடன் கொடை விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது.

    விழாவை முன்னிட்டு தினசரி சிற்றுண்டி தொடர்ந்து 8 நாட்களும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. கொடை விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சேகர் என்ற சந்திரசேகர் மற்றும் விழாக்குழு வினர் செய்திருந்தனர்.

    விழாவில் தமிழ்நாடு மதசார்பற்ற ஜனதாதள மாநில துணைத்தலைவர் வக்கீல் சொக்கலிங்கம், நாடார் சமுதாய குழு தலைவர் தங்ககுட்டி நாடார், அருணாச்சல பாண்டியன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் பிரிவு அமைப்பாளரும் மாவட்ட கவுன்சிலருமான வக்கீல் செல்வகுமார், காண்ட்ராக்டர்ஸ் அழகேசன், பொன்மாடசாமி பிரதர்ஸ், ஜெயபாண்டியன் நாடார், விஜயா மெடிக்கல் செந்தில்குமார், காந்திநகர் பாஸ்கர் ஜெயராஜ் நாடார், ஜெயக்குமார், முள்ளக்காடு வியாபாரிகள் சங்க தலைவர் முனியதங்கம் நாடார், முள்ளக்காடு ஊராட்சிமன்ற தலைவர் கோபிநாத் நிர்மல், தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி விளையாட்டுப் பிரிவு தலைவர் ஏ.வி.பிரபாகர், தூத்துக்குடி பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எஸ்.எம். சகாயராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஸ்டாலின், உப்பு உற்பத்தியாளர்கள் அழகேசன் நாடார், தங்கராஜ் நாடார், ஞானவேலன், முகேஷ் சண்முகவேல், பொன்ராம், பத்மநாதன், கணேசன், முருகேசன், லட்சுமணன் ராஜா சால்ட், குருத்து டிரேடர்ஸ் மற்றும் எல்.ஆர். பாண்டியன் ஸ்போட்ஸ் அகாடமி நிறுவனர் எல்.ஆர். சிவாகர், ஆறுமுகம் ஜூவல்லர்ஸ் அதிபர் பலவேச கார்த்திகேயன், முல்லை லதா சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் முத்துராஜா, முத்துக்குமார், கேபிள் காண்டிராக்டர் பொன்ராஜ், முத்துவிஜய், பி.பி.ஜி. சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் ஈசாக், பாவா ஹோட்டல் செல்வகுமார் மற்றும் தி.மு.க. நிர்வாகி சில்வர் சிவா, காந்திநகர் முருகேசன் நாடார், சுந்தரம், சுப்பிரமணியன், நடராஜன். கோவை பொன்பாண்டியன் மற்றும் பக்தர்கள் உட்பட கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×