search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி  செலுத்தும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    தஞ்சையில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • இந்த முகாம் வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோ ட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மாதாக்கோட்டை சாலையில் இன்று கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்இந்த முகாமை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார் .

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இன்று கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த முகாம் வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டத்தில் 2 லட்சத்து 92 ஆயிரம் கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

    ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    விடுதல் இன்றி அனைத்து கிராமங்களிலும் இந்த பணி நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் நர்மதா, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் தமிழ்செல்வம், உதவி இயக்குனர் சையத் அலி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன், தாசில்தார் சக்திவேல், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், எஸ்.பி.சி.ஏ அலுவலர் சாரா உறுப்பினர்கள் எட்வர்ட் ஆரோக்கியராஜ், முகமது ரபி, விஜயலட்சுமி பாரதி, முனைவர் சதீஷ்குமார், ஆடிட்டர் ராகவி, கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×