என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பெண்ணை ஊர்வசி அமிர்தராஜ்
எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காட்சி.
பெரியதாழை அருகே விபத்தில் காயம் அடைந்த பெண்ணுக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ நேரில் ஆறுதல்
- பலத்த காயம் அடைந்த அட்லிண்டா சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
- அங்கு சிகிச்சை பெற்று வந்த அட்லிண்டாவை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி:-
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியதாழை சவேரியார் தெருவைச் சேர்ந்த ஆரோக்கியம் மகன் மெர்லின் (வயது41). இவரது மனைவி அட்லிண்டா (35). இவர்கள் தனது மகன்க ளுடன் மோட்டார் சைக்கி ளில் திருச்செந்தூர் நோக்கி சென்றபோது, அந்த வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயம் அடைந்த அட்லிண்டா சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அறிந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் நேற்று காலை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அட்லிண்டாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் நிவாரண உதவியாக ரூ. 25 ஆயிரம் வழங்கினார்.
அப்போது, பெரியதாழை பங்குதந்தை சுசீலன், ஊர் பெரியவர்கள் அந்தோணி, லிபொன்ஸ் அமலதாஸ், கூட்டுறவு சங்க தலைவர் சந்தியா ரமேஷ், மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் காங்கிரஸ் எடிசன், ஊடகப்பிரிவு முத்துமணி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெய சீலன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்ட கமிட்டி ஜெனி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






