search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைஞாயிறு ஊராட்சியில் ஒன்றியக்குழு கூட்டம்
    X

    தலைஞாயிறு ஊராட்சியில் ஒன்றியக்குழு கூட்டம்

    • ரேஷன் கார்டுகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்த பிறகு வழங்க வேண்டும்.
    • புதிதாக பயணிகள் நிழலகம் அமைத்து தர வேண்டும்.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, செபஸ்தி அம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் உறுப்பி னர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

    ஜெகதீஷ் (துணை தலைவர்):

    தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் கோடை காலத்தில் மாணவர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் மண்பானையில் குடிநீர் வைக்க வேண்டும்.

    ஞானசேகரன் (சிபிஎம்):

    நத்தப்பள்ளம் முதல் செம்பியவேளூர் வரை உள்ள பழுதடைந்த சாலையை செப்பனிட்டு புதிய சாலையாக அமைத்து தர வேண்டும் என்று பேசி கொண்டிருந்தார்.

    அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெகதீஷ், ரம்யா, முத்துலட்சுமி, தீபா ஆகிய 4 உறுப்பினர்களும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    மாசிலாமணி (தி.மு.க.):

    கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ள பிலாற்றங்கரையின் இருபுறமும் மண்சாலையாக உள்ளது.

    இதை தார்சா லையாக மாற்றி தர வேண்டும்.

    உதயகுமார் (தி.மு.க.):

    தமிழக அரசு குடும்ப தலைவிக்கு உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவதற்கு முன்பு ரேஷன் கார்டுகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்த பிறகு வழங்க வேண்டும்.

    கஸ்தூரி குஞ்சையன் (தி.மு.க.):

    வெள்ளப்பள்ளம் கடைத்தெருவில் புதிதாக பயணிகள் நிழலகம் அமைத்து தர வேண்டும்.

    தமிழரசி (தலைவர்):

    உறுப்பினர்களின் கோரிக்கை களை முன்னுரிமைகளின் அடிப்படையில் படிப்படி யாக நிறைவேற்றி தரப்படும் என்றார்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    Next Story
    ×