என் மலர்
உள்ளூர் செய்திகள்

கும்பகோணத்தில் தியாகபிரம்ம இசை விழா நடந்தது.
கும்பகோணத்தில் தியாகபிரம்ம இசை விழா
- பஞ்சரத்ன கீர்த்தனை விழா கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.
- வெங்கடேஷ், சுபாஷினி ஆகியோரின் வீணை நிகழ்ச்சி நடந்தது.
கும்பகோணம்:
கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள சங்கர மடத்தில் வளரும் இசை கலைஞர்கள் மன்றம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி சார்பில் 37-ம் ஆண்டு தியாகபிரம்ம இசை விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு பஞ்சரத்ன கீர்த்தனை விழா கடந்த 2 நாட்களாக நடந்தது.
நிகழ்ச்சிக்கு இசைக்கலை ஞர்கள் மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தீபக்ரமேஷ் முன்னிலை வகித்தார்.
விழாவில் திருப்பனந்தாள் மோகன்தாஸ் குழுவினரின் மங்கள இசை விழா மற்றும் கும்பகோணம் இசை வாத்திய கலைஞர்கள் சார்பில் கச்சேரி ஆகியவை நடந்தது.
தொடர்ந்து, உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகளும், ஸ்ரீநிதி ரக்சனாராய், சுசித்ரா பார்த்தசாரதி, பிரியா பிரதீப் குமார், வெங்கடேஷ், சுபாஷினி ஆகியோரின் வீணை நிகழ்ச்சியும் நடந்தது.
அதனைத் தொடர்ந்து, மதுரிமா ராமகிருஷ்ணன், ஸ்ரீமதி நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோரின் பாட்டு கச்சேரியும், கிருஷ்ணசாமியின் வயலின், தியாக பிரம்ம இசை விழா, ஸ்கந்த சுப்பிரமணியன் மிருதங்கம், கிருஷ்ணசாமி கடம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
இதனையடுத்து ஆஞ்சநேயர் உற்சவம் நடந்தது.
விழா ஏற்பாடுகளை குடந்தை வளரும் இசை கலைஞர்கள் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.






