search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டத்தில் மாநில துணை பொது செயலாளர் காமராசு நாடார் பேசிய காட்சி.


    தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் ஆலோசனை கூட்டம்

    • வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) திருச்செந்தூர் காமராஜர் சாலையில் உள்ள ராஜ் மஹாலில் பனைமர தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.
    • திருச்செந்தூர் கல்லா மொழியில் நடைபெற்று வரும் அனல் மின் தொழிற்சாலையில் செய்வதற்கு இந்த பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரில் தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் சசிகுமார், உடன்குடி ஒன்றிய செயலாளர் பாலாஜி, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ்மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருச்செந்தூர் நகரச் செயலாளர் பார்த்திபன் வரவேற்று பேசினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் காமராசு நாடார், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருச்செந்தூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜெயபால் நன்றி கூறினார். கூட்டத்தில் வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) திருச்செந்தூர் காமராஜர் சாலையில் உள்ள ராஜ் மஹாலில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் பனைமர தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.

    பனைத் தொழில் மற்றும் பனைத் தொழில் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டு உறுப்பினர்களாக சேர்ந்து தமிழ்நாடு அரசு மூலம் கிடைக்க பெறும் சலுகைகள் மற்றும் குடும்ப பாதுகாப்பு சலுகைகள் பெற்று பயனடையலாம்.

    திருச்செந்தூர் நகரில் ஏற்பட்டுள்ள கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடவும் முடங்கி கிடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தினை விரைந்து செயல்படுத்திடவும் நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருச்செந்தூர் கல்லா மொழியில் நடைபெற்று வரும் அனல் மின் தொழிற்சாலையில் செய்வதற்கு இந்த பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். திருச்செந்தூர் அரசுமருத்துவமனையில் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலர் பணிக்கு நிரந்தர பணியாளர் இல்லாததால் வெளி ஊர்களில் இருந்து வரும் பொதுமக்கள் பல மணி நேரம் சில சமயங்களில் பல நாட்கள் காத்திருந்து வாங்கும் அவலம் நடைபெற்று வருகிறது.

    எனவே அரசு மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு சான்றுகள் உடனுக்குடன் வழங்கிட நிரந்தர பணியாளரை நியமிக்க வேண்டும் என்பட உள்ளிட்ட பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ஜெகன் பண்ணையார், மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் விக்ரம், ஆத்தூர் நகரச் செயலாளர் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×