என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி குறித்து முடிவு: டி.டி.வி.தினகரன்
    X

    இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி குறித்து முடிவு: டி.டி.வி.தினகரன்

    • தி.மு.க.வை வீழ்த்த தொண்டர்கள் அனைவரும் அணி திரள வேண்டும்.
    • தமிழ்நாட்டில் கவர்னர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.

    விழுப்புரம் :

    விழுப்புரம் கோட்டக்குப்பம் நகர்மன்ற அலுவலகம் அருகே அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பதவி சண்டையால் கட்சி யாருக்கு சொந்தம் என்று நீதிமன்றம் வரை சென்றுள்ளது. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் தீயசக்தி என தி.மு.க.வை அடையாளம் காட்ட வேண்டும்.

    தி.மு.க. ஆட்சி அமைந்து 2 வருடங்களாகும் நிலையில் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை ஒன்றையும் நிறைவேற்றவில்லை. தி.மு.க.வை வீழ்த்த தொண்டர்கள் அனைவரும் அணி திரள வேண்டும்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வியூகம் அமைக்கும் வகையில் அ.ம.மு.க. நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். தமிழ்நாட்டில் கவர்னர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×