என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி விஷமருந்தி தற்கொலை
    X

    தொழிலாளி விஷமருந்தி தற்கொலை

    • தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
    • நோய் கொடுமையால் விபரீத முடிவு

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை பூமாலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருள் தாஸ் (வயது 43). இவர் கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற போதிலும் பூரண குணமடைய முடியவில்லை.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அருள் தாஸ் எலி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அவரது மனைவி ஜெயராகினி கணவரை மீட்டு மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் அருள்தாஸ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×