search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரி பாலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்
    X

    காவேரி பாலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

    • காவேரி பாலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றபட்டுள்ளது
    • திருச்சி மாநகரப் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

    திருச்சி:

    பொங்கல் பண்டிகையின் தொடா் விடுமுறையால், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வருவோா் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். காவிரி பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அனைத்து வாகனங்களும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வருகிறது. இதனால், அப்பகுதியில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாமல் உள்ளது.

    இந்நிலையில், திருச்சி மாநகரப் போக்குவரத்து காவல்துறை சாா்பில் பொங்கலுக்காக பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் அனைத்து பேருந்துகள், காா்கள், லாரிகள் அனைத்தும் சா்க்காா்பாளையம் அணுகுசாலை வழியாக மட்டுமே செல்ல வேண்டும். அவசர ஊா்திகள் அனைத்தையும் சா்க்காா்பாளையம் அணுகுசாலை வழியாக அனுப்பி, சஞ்சீவி நா் சந்திப்பில் தாற்காலிக திறப்பை

    ஏற்படுத்தி அதன் வழியாக அனுமதிக்கப்படும். அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் சூழலில், சென்னை-திருச்சி சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தையும் சஞ்சீவி நகா் பகுதியில் திரும்ப அனுமதிக்காமல், நேராகச் சென்று பால் பண்ணை வழியாக திரும்பி வர அனுமதிக்கப்படும். தேவையான இடங்களில் கல்லூரி மாணவா்களின் என்சிசி, என்எஸ்எஸ் பிரிவு, ஊா்க்காவல் படை, போக்குவரத்து வாா்டன் ஆகியோரை கொண்டு போக்குவரத்து ஒழுங்குபடுத்து பணி மேற்கொள்ளப்படும்.

    சஞ்சீவிநகா், ஓயாமரி சாலை, தேசிய நெடுஞ்சாலை-38, புறவழிச் சாலை, கொண்டையம்பேட்டை அணுகுசாலை, கொண்டயம்பேட்டை சந்திப்பு, கல்லணை சாலை ஆகிய இடங்களில் கூடுதல் போலீஸாா் நியமிக்கப்பட்டு போக்குவரத்து ஒழுங்குப்படுத்ப்படும் என மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாநகரம், கோட்டை போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு, திருவரங்கம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீசார் பொங்கல் பண்டிகை நாள்கள் முடியும் வரையில் (வரும் 17-ந் தேதி வரை) கூடுதல் கவனத்துடன் பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


    Next Story
    ×