என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி தனியார் பஸ் விபத்து
- சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி தனியார் பஸ் விபத்துக்குள்ளானது
- சிறு காயத்துடன் உயிர் தப்பினர்
திருச்சி:
திருச்சியில் இருந்து விராலிமலை நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பேருந்தை திருச்சி பாலக்கரை மரக்கடை பகுதியைச் சேர்ந்த கோபால் மகன் சண்முகம்(வயது25) என்பவர் ஓட்டி சென்றார். பாத்திமா நகர் தனியார் பல்நோக்கு பயிற்சி நிலையம் அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலை நடுவே இருக்கும் தடுப்புச் சுவர் மீது மோதி பஸ் நின்றது. இதில் சிறு காயத்துடன் அனைத்து பயணிகளும் உயிர்தப்பினர். தகவல் அறிந்து விரைந்து வந்த மணிகண்டம் போலீசார் காயம் அடைந்தவர்களை விராலிமலை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். . இவற்றில் விராலிமலை காட்டுப்பட்டியைச் சேர்ந்த அமானுல்லா மனைவி ரஹமத் பீபி(55) என்பவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.