search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பவர்களை  உடனடியாக கைது செய்ய வேண்டும் -  விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
    X

    விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் - விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

    • தமிழக விவசாயிகளை காப்பாற்ற நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும்
    • விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    திருச்சி,

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி அண்ணாமலை நகரில் நடந்தது. கூட்டத்தில் மண்டல தலைவர்கள் திருச்சி மேகராஜன், கரூர் தட்சிணாமூர்த்தி, புதுக்கோட்டை சேகர், பரமசிவம், மாநில செயலாளர்கள் மகேந்திரன், மனோகரன், ஜான் மில்க்யூ ராஜ், தியாகு, பாண்டியன், பொருளாளர் கார்த்திகேயன், சட்ட ஆலோசகர்கள் முத்துகிருஷ்ணன், முத்துச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழக விவசாயிகளை காப்பாற்ற நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும், விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நாட்டிலுள்ள 29 மாநிலங்களைச் சேர்ந்த 85 விவசாயிகளை ஐதராபாத்துக்கு வரவழைத்து பேசினார்.

    இதில் பங்கேற்று விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்திய தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளுக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். தெலுங்கானாவில் 18 வயது முதல் 59 வயதுக்குள் விவசாயி இறக்க நேரிட்டால் அந்த குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது. அதே போன்று தமிழகத்திலும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் விவசாயிகளின் உரிமையையும், நன்மையையும், காப்பாற்ற டெல்லி சென்று போராட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதி அளிக்க வேண்டும். மேலும் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×