என் மலர்
உள்ளூர் செய்திகள்

முத்தரையர் சமுதாய மக்களுக்கு உரிய இடப்பங்கீடு ஒதுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-முசிறி பொதுக்கூட்டத்தில் கே.கே.செல்வகுமார் பேச்சு
- முத்தரையர் சமுதாய மக்களுக்கு உரிய இடப்பங்கீடு ஒதுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முசிறி பொதுக்கூட்டத்தில் கே.கே.செல்வகுமார் பேசினார்
- இட ஒதுக்கீடு அரசு அளிக்கும் வரை வீர முத்தரையர் சங்கத்துடன் தமிழர் தேசம் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் தொடர்ந்து போராடுவோம் என பேசி–னார்.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசி–றியில் தமிழர் தேசம் கட்சி சார்பில் இடப்பங்கீடு எனது உரிமை என்ற தலைப்பில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். இதில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் நிறுவன தலைவர் கே.கே.செல்வகுமார் கலந்து–கொண்டு பேசியதாவது:- முத்தரையர் மக்களுக்கு இடப்பங்கீடு வழங்க வேண்டும், ஜாதிவாரிய கணக் கெடுப்பு எடுத்து மக்களுக்கு உரிய இடப்பங்கீட்டை வழங்க வேண்டும்.
இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் எங்களது இடப்பங்கீடு உரிமை குறித்து தமிழகத்தில் 12 இடங்களில் கூட்டம் நடத்தி தமிழக அரசுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்ததை தொடர்ந்து, முசி–றியில் 13-வது கூட்டத்தை நடத்துகிறோம். ஆகவே முத்தரையர் சமுதாய மக்களுக்கு உரிய இடப்பங்கீடு ஒதுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு அரசு அளிக்கும் வரை வீர முத்தரையர் சங்கத்துடன் தமிழர் தேசம் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் தொடர்ந்து போராடுவோம் என பேசி–னார். இந்நிகழ்வில் மாநில செயலாளர் சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் குரு–மணிகண்டன், மாநில கொள்கை பரப்பு செய–லாளர் தஞ்சை சாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராஜ், முசிறி செயலாளர் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.






