என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
    X

    பேரூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

    • அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பேரூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் கோழிகள் பயனடைந்தன.

    திருச்சி

    அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பேரூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    மருத்துவ முகாமில் மண்டல இணை இயக்குனர் முரு எஸ்தர் ஷீலா மற்றும் ஸ்ரீரங்கம் கோட்ட உதவி இயக்குனர் கணபதி பிரசாத் மேற்பார்வையில் கால்நடை மருத்துவர்கள், சுரேஷ் பாபு, அன்பரசி மற்றும் சௌந்தர்யா கால்நடை ஆய்வாளர்கள் சம்சாத், தவமணி, கவியரசு, கிருஷ்ணவேணி, சுந்தர்ராஜன் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி, மற்றும் குடற்புழு நீக்க சிகிச்சை அளித்தனர்.

    இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் கோழிகள் பயனடைந்தன. சிறந்த கன்று மற்றும் பராமரிப்பு மேலாண்மைக்கான சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×