என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  லால்குடி அருகே வெளிநாட்டு வேலை தேடிய வாலிபரிடம் ரூ.75 ஆயிரம் மோசடி
  X

  லால்குடி அருகே வெளிநாட்டு வேலை தேடிய வாலிபரிடம் ரூ.75 ஆயிரம் மோசடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • லால்குடி அருகே வெளிநாட்டு வேலை தேடிய வாலிபரிடம் ரூ.75 ஆயிரம் மோசடி நடந்தது.
  • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருச்சி

  திருச்சி மாவட்டம் லால் குடி அருகே உள்ள வடுகர் பேட்டை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த–வர் டிரால்டின் ஜெயக்குமார் (வயது 36). பட்ட–தாரியான இவர் வெளி–நாட்டு வேலைக்கு செல்லும் முயற் சி–யில் ஈடுபட்டி–ருந்தார்.இதற்காக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள குளோபல் டிராவல்ஸ் இன்போ என்ற நிறுவ–னத்தில் வெளிநாடு வேலைக்கு அணுகியுள்ளார். அதைத் தொடர்ந்து சவுதி அரேபியா நாட்டுக்கு அவரை அனுப்பி வைக்க ரூ.2 லட்சம் பணம் கேட்டுள்ளனர்.பின்னர் முன்பணமாக ரூ.75 ஆயிரத்தை ஜெயக் குமார் அந்த டிராவல்ஸ் நிறுவனத்திடம் கொடுத் துள்ளார். ஆனால் 3 மாதங்களுக்கு மேலாகியும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவில்லை. பின்னர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். அதையும் திரும்ப தரவில்லை.இதையடுத்து பாதிக்கப் பட்ட ஜெயக்குமார் கல்லக் குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மேற்கண்ட குளோபல் டிராவல் இன்போ நிறுவனத்தின் நிர்வாகி சென்னை ஆவடி காமராஜ் நகர் ஒன்பதாவது தெரு பகுதியைச் சேர்ந்த மின் ஹாஜுதீன் மீது மோசடி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×