என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆட்டோ டிரைவரிடம் பணத்தை பறித்த ரவுடிகள் கைது
- ஆட்டோ டிரைவரிடம் பணத்தை பறித்த ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
திருச்சி:
திருச்சி காஜாப்பேட்டை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 27) ஆட்டோ டிரைவரான இவர், சம்பவத்தன்று மாரியம்மன் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்து பாலக்கரை பகுதியை சேர்ந்த பிரபு (23), பாலக்கரை சந்தியாப்பர் பாளையத்தை சேர்ந்த ராபர்ட் வின்சிலி ஆகிய 2 ரவுடிகள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இது குறித்து மாரிமுத்து பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபு, ராபர்ட் வின்சிலி ஆசிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது.
Next Story