என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரதிதாசன் பல்கலைக்கழக செய்முறை தேர்வுகள் ஒத்திவைப்பு
    X

    பாரதிதாசன் பல்கலைக்கழக செய்முறை தேர்வுகள் ஒத்திவைப்பு

    • பாரதிதாசன் பல்கலைக்கழக செய்முறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
    • ‘மாண்டஸ்’ புயல் எச்சரிக்கை எதிரொலி

    திருச்சி:

    வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக வலுவடைந்து இன்று புதுச்சேரி அருகே வடக்கு வங்கக்கடல் பகுதிக்கும், ஆந்திரா மாநிலத்தை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிக்கும் அருகே நகரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதி பலத்த மழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழையும் பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் (பொறுப்பு) எஸ்.சீனிவாச ராகவன் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் இந்திய வானிலை மையத்தின் புயல் மற்றும் மழை எச்சரிக்கை காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற (தன்னாட்சி அல்லாத) கல்லூரிகளில் நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலை பருவ தேர்வுகளுக்குரிய எழுத்து தேர்வுகள் மற்றும் செய்முறை தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது.

    இந்த தேர்வுகள் நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்க பணிக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 106 உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

    Next Story
    ×