என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில்  பெயிண்டர் தற்கொலை
    X

    திருச்சியில் பெயிண்டர் தற்கொலை

    • முத்துக்குமாருக்கு ராதிகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
    • குடிப்பழக்கத்திற்கு அடிமையான முத்து குமாரை மஞ்சள் காமாலை நோய் தாக்கியது.

    திருச்சி :

    திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை பள்ளக்காடு அதவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (34). பெயிண்டரான இவருக்கு திருமணம் ஆகி ராதிகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான அவரை மஞ்சள் காமாலை நோய் தாக்கியது.

    இதற்கு நாட்டு வைத்தியம் பார்த்து வந்தார். ஆனாலும் முழுமையாக குணமடைய முடியவில்லை. இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முத்துக்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது தம்பி முருகேசன் சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று முத்துக்குமார் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×