search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி வாலிபர்கள் 7 பேருக்கு லைசென்ஸ் ரத்து நோட்டீஸ்
    X

    திருச்சி வாலிபர்கள் 7 பேருக்கு லைசென்ஸ் ரத்து நோட்டீஸ்

    • இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட திருச்சி வாலிபர்கள் 7 பேருக்கு லைசென்ஸ் ரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது
    • விளக்கம் அளிக்க ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது

    திருச்சி,

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிவிடை சிறுமருதூர் பகுதியில் தஞ்சாவூர் சீனிவாசபுரத்தை சேர்ந்த மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் பட்டாசுகளை வைத்து வெடித்து (வீலிங்) சாகசம் ெசய்தார்.

    அதற்கு திருச்சி புத்தூர் கல்லாங்காட்டை சேர்ந்த அஜய் (வயது 24) உடந்தையாக இருந்தார். சிலர் பட்டாசு வெடித்து சிதறக்கூடிய காட்சிகளை வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பத விட்டனர்.

    இந்த வீடியோ காட்சிகள் வைரல் ஆனதை தொடர்ந்து திருச்சி பேலீசார், இது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களை கண்காணித்து, விசாரணை நடத்தி 9 பேரை கைது செய்தனர்.

    இதில் லால்குடி காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர், காணகிளியநல்லூர் போலீசார் கைது செய்த ஒரு நபர், திருச்சி சமயபுரம், திருச்சி அரசு மருத்துவமனை காவல்நிலைய போலீசார் கைது செய்த தலா ஒருவர் என மொத்தம் 7 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் நோட்டீஸ் விநியோகம் செய்துள்ளது.

    இந்த நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க 7 நாட்கள் அவகாம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சரியான விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில் அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.

    இந்த நிலையில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தெரிவித்துள்ளதாவது:-

    திருச்சி மாவட்ட பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு சாகசம் என்ற பெயரில் பிறரை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிச் சென்று பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களது பைக்குகள் பறிமுதல் ெசய்யப்பட்டுள்ளது.பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்குகளை ஒட்டி அதனை வீடியோவாக பதிவிடும் நபர்களை கண்காணிக்க சிறப்பு வலைதள கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இது போன்ற பைக் சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×