என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீரெங்கத்தில் 5 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க அனுமதி கோரி கடிதம்
- ஸ்ரீரெங்கத்தில் 5 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க அனுமதி கோரி கடிதம் அனுப்பப்ட்டுள்ளது
- இந்து சமயஅறநிலையத்துறைக்கு மேயர் அனுப்பினார்
திருச்சி:
ஸ்ரீரங்கத்தில் வருடந்தோறும் அனைத்து நாட்களிலும் திருவிழா நடப்பதால் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து பெருமாளை வழிபட்டு செல்கின்றனர்.
இதில் பக்தர்கள் கார், வேன் மற்றும் பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வந்து கோயிலின் மதில் சுவர் அருகே உத்திரவீதிகளில் நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பக்தர்களின் வாகனங்களை நிறுத்த மாற்று இடத்திற்கு மாநகராட்சி நிர்வாக முடிவு செய்தது. அதற்கான இடம் தேடும் பணி தீவிரமாக நடந்தது. இதில் பஞ்சக்கரை கொள்ளிடக்கரையில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான இடம் இருப்பதும் அதனை கேட்டு பெற்று பிரமாண்ட வாகன நிறுத்தம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில் :-
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதாலும், பக்தர்கள் வந்து செல்லும் வாகனங்கள் கோவிலின் மதில்சுவர் அருகே நிறுத்தப்படுவதாலும் சாலை குறுகலாக இருப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனை தவிர்க்கும் வகையில் பக்தர்கள் வரும் கார், வேன், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு பஞ்சக்கரை
யாத்ரி நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடக்கரையில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் சுமார் 5 ஏக்கர் இடத்தில் வாகன நிறுத்தம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், மேயர் அன்பழகன் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறையினரு க்கு கடிதம் எழுதி உள்ளனர். விரைவில் அனுமதி கடிதம் வந்த பினனர் பணிகள் துவங்கி பிரமாண்ட வாகன நிறுத்துமிடம் கட்டப்படும்.