என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓடும் பஸ்சில் அங்கன்வாடி பெண் ஊழியரிடம் 7 பவுன் செயின் பறிப்பு
- ஓடும் பஸ்சில் அங்கன்வாடி பெண் ஊழியரிடம் 7 பவுன் செயின் பறிப்பு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- ‘டிப்டாப்’ மங்கைகள் 3 பேருக்கு வலைவீச்சு
திருச்சி
திருச்சி எடமலைப்பட்டி புதூர் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சர்மிளா தேவி (வயது 41). இவர் துறையூர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் அவர் இன்று காலை 8.30 மணிக்கு எடமலைப்பட்டி புதூர் எஸ்.பி.ஐ. காலனி பஸ் நிறுத்தத்தில் இருந்து ஒரு அரசு டவுன் பஸ்சில் திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். இதில் அவர் பயணம் செய்த பத்து நிமிட இடைவெளியில் அவரது கழுத்தில் கை வைத்து பார்த்த போது, தான் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயின் மாயமாகி இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் கண்ணீர் விட்டு கதறியபடி சர்மிளா தேவி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கு தனது செயின் பறிக்கப்பட்டது தொடர்பாக புகார் அளித்தார்.
Next Story






