என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருவெள்ளறை பெருமாள் கோவிலில் கருட சேவை
- சித்ரா பௌர்ணமியையொட்டி கருட சேவை வீதி உலா நடைபெற்றது
- திருவீதி உலா வெளிபிரகாலத்தில் நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம்
மண்ணச்சநல்லூர்,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள், உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் திருச்சிக்கு அருகில் துறையூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.108 வைணவத் திருத்தலங்களில் நான்காவது திவ்ய தேசமான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று கருட சேவை திருவீதி உலா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கருடசேவையைத் தரிசிப்பது பாவம் போக்கும், நாக தோஷம் போக்கும் என்பது ஐதீகம். மேலும் திருமணமான பெண்கள் கருட பஞ்சமி நாளில் கருடனை தரிசித்து பூஜை செய்தால் பிறக்கும் குழந்தைகள் அறிவும், வீரமும் உடையவர்களாக விளங்குவர் என்று நம்பப்படுகிறது.இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி நாளல் மாலை கருடசேவை திருவீதிஉலா நடைபெறும் கோவில் வெளிப்பிரகாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஆனால் மழை பெய்யும் என்ற காரணத்தால் கோயில் உட்பிரகாரத்தில் மட்டுமே கருடசேவை நடைபெற்றது. இதனால் கருடசேவை வெளிப்பிரகாரத்தில் திருவீதிஉலா நடைபெறாமல் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.