search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் திருச்சி வருகை-முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு
    X

    முதல்-அமைச்சர் திருச்சி வருகை-முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு

    • வருகிற 26-ந்தேதி முதல்வர் திருச்சி வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்
    • தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவுற்று உள்ள நிலையில் புதிய தவணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்

    திருச்சி:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகிற 26-ந்தேதி திருச்சி வருகை தருகிறார். அன்று திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.387.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கதவணையை திறந்து வைக்க உள்ளார்.

    ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த பழைய அணை உடைந்து விட்ட காரணத்தால் புதிய அணை கட்டப்பட்டு வந்தது. தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவுற்று உள்ள நிலையில் புதிய தவணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.

    இதையடுத்து தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு முக்கொம்பு மேலணையில் இன்று நேரில் பார்வையிட்டு முதல்வர் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மா. பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் சௌந்தரபாண்டியன், தியாகராஜன், எம். பழனியாண்டி, நீர்வளத்துறை கண்காணிப்புப் பொறியாளர் வேட்டைச்செல்வம், செயற்பொறியாளர்கள் கீதா, மணிமோகன் ஆகியோர் உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×