என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  போதையில் சரமாரியாக வெட்டிக்கொண்ட சகோதரர்கள்
  X

  போதையில் சரமாரியாக வெட்டிக்கொண்ட சகோதரர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • துறையூர் அருகே கறி விருந்தில் ஏற்பட்ட தகராறு சகோதரர்கள் வெட்டிக்கொண்டனர்
  • போலீசார் தீவிர விசாரணை

  துறையூர்,

  திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65). இவரது மகன்கள் பன்னீர்செல்வம் (48), பாஸ்கர் (40). இருவரும் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்கள். இதில் பன்னீர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார். பாஸ்கர் என்பவருக்கு திருமணமாகி மனைவி இறந்துவிட்ட நிலையில் இருவரும் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வருகின்றனர்.இந்நிலையில் காந்திபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று முடிந்து நேற்று இரவு கறி விருந்து நடைபெற்றுள்ளது. அப்பொழுது சகோதரர்கள் இருவரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இருவரும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பாஸ்கர், தனது தகப்பனாரான மாரிமுத்துவிடம் கறி கேட்டுள்ளார். அதற்கு மாரிமுத்து கறி ஏற்கனவே தீர்ந்து விட்டதாக கூறியுள்ளார்.இதனால் பாஸ்கரின் அண்ணன் பன்னீர்செல்வம் தனது இலையில் இருந்த கறியை எடுத்து பாஸ்கர் இலையில் வைத்துள்ளார். எச்சில் இலையில் இருந்த கறியை எடுத்து எப்படி என்னுடைய இலையில் வைக்கலாம்? என கூறி பாஸ்கர் பன்னீர்செல்வத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாக்குவாதம் கைகலப்பாகி சகோதரர்கள் இருவரும் காய்கறி நறுக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து மாறி மாறி வெட்டிக்கொண்டனர். இதனால் பதற்றம் அடைந்த மாரிமுத்துவின் உறவினர்கள் சகோதரர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச் சம்பவத்தை அறிந்த துறையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Next Story
  ×