என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துறையூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில்  10 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு
    X

    துறையூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் 10 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

    • 10 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    துறையூர் :


    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள தெற்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது40). இவரது மனைவி கஸ்தூரி (32). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு விவசாய வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் மாலை வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க நகை 10 பவுன், 80 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இது தொடர்பாக கஸ்தூரி அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதே போன்று துறையூர் ஆஸ்பத்திரி சாலையில் நகைக் கடை வைத்திருப்பவர் சுரேஷ் (45). இவர் சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்த பொழுது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த சுமார் அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணம் 20,000 ரூபாய் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக சுரேஷ் அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் பகுதியில் வீடு மற்றும் நகை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    Next Story
    ×