என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொள்ளிடம் அருகே ஓடும் பஸ்ஸில் ஆசிரியையின் 5 பவுன் நகை திருட்டு
  X

  கொள்ளிடம் அருகே ஓடும் பஸ்ஸில் ஆசிரியையின் 5 பவுன் நகை திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொள்ளிடம் அருகே ஓடும் பஸ்ஸில் ஆசிரியையின் 5 பவுன் நகை திருட்டு போனது
  • இதுகுறித்து போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருச்சி:

  திருச்சி லால்குடி அகிலாண்டபுரம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி இவரது மனைவி பிரியா (வயது 28) இவர் உத்தமர் கோவிலில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆண்டு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.இதனால் மாலையில் வீடு திரும்ப தாமதமாகும் எனக் கருதிய பிரியா பாதுகாப்பு கருதி வீட்டில் இருந்து ஐந்து பவுன் நகைகளை கைப்பையில் வைத்துக்கொண்டு பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றார். அகிலாண்டபுரத்தில் இருந்து ஒரு தனியார் பஸ்ஸில் நம்பர் ஒன் டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். பின்னர் மீண்டும் ஒரு டவுன் பஸ்ஸில் அங்கிருந்து உத்தமர் கோவில் பகுதிக்குச் சென்றார். அந்த பஸ்ஸில் இருந்து இறங்கி தனது கை பையை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ஐந்து பவுன் நகைகளை காணாமல் திடுக்கிட்டார்.மர்ம நபர்கள் ஓடும் பஸ்ஸில் அவரது கைப்பையை திறந்து நகைகளை திருடி சென்று விட்டனர் இது தொடர்பாக பிரியா கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Next Story
  ×