search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சி.பா.ஆதித்தனாருக்கு சிலை அமைக்க வேண்டும்
    X

    சி.பா.ஆதித்தனாருக்கு சிலை அமைக்க வேண்டும்

    • இந்திய நாடார் பேரவை கூட்டத்தில் தீர்மானம்
    • முதல்வரை சந்தித்து வலியுறுத்த முடிவு

    திருச்சி,

    இந்திய நாடார் பேரவை மாநில செயற்குழு கூட்டம் திருச்சி பொன் நகரில் நடந்தது. பேரவை தலைவர் ஜெ.டி.ஆர். சுரேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தி.மு.க. முதன்மைச் செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என். நேரு பேரவைக்கு செய்து கொடுத்த பணிகளுக்கு நன்றி தெரிவித்து அவர் பேசினார். அதன் பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலை சேதமடைந்து இருக்கிறது. அதனை பேரவை சார்பாக முறையாக பூங்கா அமைத்து அமைச்சர் கே.என். நேரு மூலமாக மிகப்பிரமாண்ட திறப்பு விழாவை நடத்த வேண்டும்.காமராஜர் நினைவு வளைவை புதுப்பித்த திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜுக்கு வாழ்த்து மடல் அனுப்ப வேண்டும்.திருச்சி மாவட்டத்தில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் திருஉருவ சிலை அமைக்க பேரவை சார்பாக முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும்.திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இடத்தை இலவசமாக கொடுத்த டாக்டர் மதுரம்தி ருவுருவ சிலைக்கு பிறந்தநாள் மற்றும் நினைவு நாளை ஒவ்வொரு வருடமும் பேரவை சார்பாக பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும். மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மண்டல செயலாளர் பதவிகளைவிரைவில் நிரப்புவது, பொதுக்குழு உறுப்பினர்களை அதிகப்படுத்துவது, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தில் மண்டல தலைவர் ஜான் வெஸ்லி, பேரவை பொதுச்செயலாளர் ராஜ்குமார், தலைமைச்செயலாளர் ஆழ்வார்தோப்பு ஜெயராஜ், பொருளாளர் எஸ்.வி.கணேசன், மாநில அமைப்பாளர் பாலகிருஷ்ணன், துணைபொருளாளர் கே.ஆர்.பி. ராஜா, மாநிலசெயற்குழு நிர்வாகிகள் பாபு பாக்கியராஜ், சேவியர், விஜயகுமார், எஸ்.கே.ராஜன், முத்துராஜ், அண்ணாதுரை, மாவட்ட தலைவர் துரைபழம்,துணைத் தலைவர் முருகானந்தம், மாநகர மாவட்ட செயலாளர் பீமநகர் ராஜேஷ் மற்றும் இணைச்செயலாளர் ராஜேஷ், மாவட்டஅமைப்பாளர் சாமுவேல் , துணைச்செயலாளர் செல்வராஜ், பாண்டியன், சுப்பிரமணி, வரகனேரி சரவணன்,புறநகர செயலாளர் தாமரை முருகேசன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


    Next Story
    ×