என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொறியியல் பணி காரணமாக திருச்சியில் 3 நாட்களுக்கு 7 ரெயில்கள் ரத்து
    X

    பொறியியல் பணி காரணமாக திருச்சியில் 3 நாட்களுக்கு 7 ரெயில்கள் ரத்து

    • தண்டவாளத்தில் பொறியியல் பணி காரணமாக திருச்சியில் 3 நாட்களுக்கு 7 ரெயில்கள் ரத்து செய்யபட உள்ளன
    • இதற்கான அறிவிப்பை தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ளது.

    திருச்சி:

    சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் தண்டவாள பகுதியில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் வருகின்ற 14, 21, 28 ஆகிய தேதிகளில் கீழ்காணும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. கரூர்- திருச்சி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரு மார்க்கத்திலும் மேற்கண்ட 3 நாட்களுக்கு முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. சேலம்- விருதாச்சலம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரு மார்க்கத்திலும் மேற்கண்ட 3 நாட்களுக்கு முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காட்டில் இருந்து காலை புறப்பட்டு திருச்சி வரை வரும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் மேற்கண்ட நாட்களில் கரூர்-திருச்சி வரை ரத்து செய்யப்படுகிறது. இதே போல மறு மார்க்கத்தில் மதியம் 1 மணிக்கு புறப்படும் ரெயில் திருச்சி- கரூர் வரை மேற்கண்ட நாட்களில் ரத்து செய்யப்படுகிறது. திருச்சியில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரை செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் மேற்கண்ட நாட்களில் திருச்சியில் இருந்து கரூர் வரை ரத்து செய்ய ப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×