என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
- 3 பேர் வெறிச்செயல்
- முந்தி சென்ற போது நிலை தடுமாறியதால் ஆத்திரம்
திருச்சி,
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சச்சிதானந்தம் (வயது 49). இவர் திருச்சி அரசு போக்குவரத்துக் கழகத்தில் புறநகர் பேருந்து டிரைவராக பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று வாத்தலை அருகே திருவாசி பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ்ஸை ஓட்டிச் சென்றார். அப்போது மண்ணச்சநல்லூர் தொடையூர் பாண்டியாபுரம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த மதன்ராஜ் (வயது 24) மற்றும் நண்பர்கள் 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.திருவாசி பகுதியில் சென்றபோது அந்த பஸ் மோட்டார் சைக்கிளை முந்தி சென்றது. இதில் மதன்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 3பேரும் அந்த பஸ்ஸை வழிமறித்தனர். பின்னர் கல்வீசி பஸ்ஸின் கண்ணாடியை நொறுக்கினர்.மேலும் டிரைவர் சச்சிதானந்தத்தின் கன்னத்தில் அறைந்து அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் செயினை பறித்து விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சச்சிதானந்தம் வாத்தலை போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் மதன்ராஜ் மற்றும் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறு அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டு டிரைவரை தாக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.






