என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்  குறித்த தகவல்களை வெளியிடுவதில் தாமதம்
    X

    திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல் குறித்த தகவல்களை வெளியிடுவதில் தாமதம்

    • திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.
    • ஆனால் இது குறித்த தகவல்கள் தற்போது வெளியிடப்படுவதில்லை.

    கே.கே.நகர்

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. பயணிகள் பல்வேறு புதிய முறைகளில் தங்கத்தை மறைத்து எடுத்து வருவதும், அதனை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி உள்ளது.

    இவ்வாறு கொண்டுவரப்படும் தங்கத்தினை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வந்தது. இதனை சுங்கத் துறை அதிகாரிகள் கிலோ கணக்கில் தினம் தோறும் பறிமுதல் செய்து வந்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட தொகை, தங்கத்தின் அளவு மற்றும் தங்கம் மறைத்து கொண்டுவரப்பட்ட விதம் உள்ளிட்டவை குறித்து சுங்கத்துறையினரால் வெளியிடப்பட்டு வந்தது. இதனால் அதிக அளவில் திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்டு சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து வரும் தகவல் பொதுமக்களிடையே பரபரப்பானது.

    இதையடுத்து இந்த தகவல்களை இனி வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே வெளியிட உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதாக தெரிய வருகிறது. சென்னை, பெங்களூர் உள்ளிட்ட விமான நிலையங்களில் பறிமுதல் செய்யப்படும் தங்கம் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியிடப்பட்டு வருகிறது.

    திருச்சி விமான நிலையத்தில் மட்டும் விவரங்கள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு பல்வேறு விமானங்களில் வந்த 25 பயணிகளைப் பிடித்து அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

    இதில் சுமார் 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிய வருகிறது ஆனால் இது குறித்த தகவல் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கபப்ட்டுள்ளது ஏன என்று பயணிகளூக்கு குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மேலும் தினம்தோறும் திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையில் சுமார் 5 முதல் 10 பயணிகள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

    ஆனால் இது குறித்த தகவல்கள் தற்போது வெளியிடப்படுவதில்லை. இது குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது திருச்சி விமான நிலையத்தில் தற்போது அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருதாக தகவல்கள் வெளியாவதால் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பயணிகள் மேலும் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

    ஆனால் விவரம் வெளியிடாமல் இருந்தால் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். இதனால் பயணிகள் தங்கம் கடத்தலுக்கு உறுதுணையாக அதிகாரிகள் செயல்பட்டு விடுவார்களோ என ஐயம் ஏற்படுவதாக பயணிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×