என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில்  2 ரவுடிகள் கைது
    X

    திருச்சியில் 2 ரவுடிகள் கைது

    • கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்தார்
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்

    திருச்சி,அக்.24-

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வாளாடி கிராமப் பகுதியை சேர்ந்தவர் தோனி (வயது 34). இவர் திருச்சி அரியமங்கலம் ரெயில்வே கேட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை தஞ்சை மாவட்டம் நாஞ்சி கோட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் ( 43) என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.350 பணத்தை பறித்துக் கொண்டு ஒடியதாக தெரிகிறது. இது குறித்து அரியமங்கலம் போலீசில் தோனி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மார்ட்டினை கைது செய்தனர்.

    இவர் ஏற்கனவே ரவுடி பட்டியலில் இருப்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து ஒரு கார், 1 செல்போன், அரிவாள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பகுதி சேர்ந்தவர் ஜமீல் (42) இவர் வயர்லெஸ் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திருச்சி ஏர்போர்ட் பசுமை நகரை சேர்ந்த ஜெயக்குமார் (29)என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ. 500 பணத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர்.

    Next Story
    ×