என் மலர்
உள்ளூர் செய்திகள்

எம்.ஜி.ஆர்.பிறந்தநாள்.....முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிக்கை
- நாளை 106வது பிறந்தநாள்: திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கபடும் என முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார் நாளை 106வது பிறந்தநாள்: திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கபடும் என முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்
- நாளை காலை 10.30 மணி அளவில் திருச்சி கோர்ட்டு அருகிலுள்ள அவரது உருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
திருச்சி:
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதா–வது:-அ.தி.மு.க. நிறுவன தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.–ஆரின் 106-வது பிறந்த நாளான நாளை 17-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 10.30 மணி அளவில் திருச்சி கோர்ட்டு அருகிலுள்ள அவரது உருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.அதுசமயம் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி–னர்கள், முன்னாள் சட்ட–மன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட செய–லாளர்கள், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வட்ட செயலாளர்கள், நிர்வா–கிகள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாண–வர் அணி, அண்ணா தொழிற் சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு இலக்கிய அணி மருத்துவ அணி, கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் கோட்டத் தலைவர்கள், முன்னாள் ஒன்றிய பெருந் தலைவர்கள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை கழக பேச்சா–ளர்கள், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி, கலைப்பிரிவினை சேர்ந்தவர்கள், செயல்வீ–ரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






