search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மின்சிக்கனத்தின் அவசியம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி
    X

    பயிற்சி வகுப்பினை மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன்ராஜ் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்த காட்சி.

    மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மின்சிக்கனத்தின் அவசியம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

    • மின் சிக்கனத்தின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • திறன் மேம்பாட்டு குழு என்ற பெயரில் ஒவ்வொரு பள்ளிக்கும் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் மின்சாரம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மின் சிக்கனத்தின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மின் சிக்கனத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அந்தந்த பள்ளிகளில் ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக திறன் மேம்பாட்டு குழு என்ற பெயரில் ஒவ்வொரு பள்ளிக்கும் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்டமாக நெல்லை மாவட்டத்தில் 30 பள்ளிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் 20 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

    இந்த குழுவில் உள்ள ஒருங்கிணைப்பா் ளர்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் சார்பில் நெல்லையில் இன்று பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. பயிற்சி வகுப்பினை மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன்ராஜ் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ் மணி, உதவி செயற்பொறியாளர் (பொது) சைலஜா, உதவி செயற்பொறியாளர் (மக்கள் தொடர்பு அலுவலர்) முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு மின் சிக்கனம் குறித்து விளக்கினர். இந்த ஒரு நாள் பயிற்சியில் 60 ஆசிரியர்கள் மற்றும் மின் பொறியாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×