search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேன்பொத்தை கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
    X

    தேன்பொத்தை கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

    • நீர்வள நிலவள திட்டத்தின் சிற்றாறு பாசனப் பகுதியான தேன்பொத்தை கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது
    • உளுந்து பயிரில் ஏற்படும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை எடுத்து கூறப்பட்டது

    செங்கோட்டை:

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் இயங்கும் நீர்வள நிலவள திட்டத்தின் சிற்றாறு பாசனப் பகுதியான தேன்பொத்தை கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆறுமுகச்சாமி வழிகாட்டுதலின் படி துணை பேராசிரியர் ரஜினிமாலா தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் பயிற்சியின் நீர்வள நிலவள திட்டத்தின் தொழில்நுட்ப உதவியாளர் சுடலை ஒளிவு வரவேற்று பேசினார். உளுந்து பயிரில் விதை உற்பத்தி முறைகள் மற்றும் உயிர் உரத்தை பயன்படுத்தி விதைநேர்த்தி செயல் விளக்கத்தின் முறைகளை எடுத்து கூறி இதன் செயல் விளக்கம் விவசாயிகள் முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டது.

    மேலும் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் பாலா உளுந்து பயிரில் ஏற்படும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை எடுத்து கூறினார். இதில் பெண்கள் மற்றும் ஆண்கள் என 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். அருண் சசிக் குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×