என் மலர்
உள்ளூர் செய்திகள்

இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
- மீன் அமிலம், ஐந்திலை கரைசல் ஆகியவை தயாரிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.
- களை நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை பயன்படுத்தி விவசாயம் செய்யலாம்.
கும்பகோணம்:
திருப்பனந்தாள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தில் திருப்பனந்தாள் வட்டாரத்திற்கு ஒதுக்கப்பட்ட கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் செயல்பட்டு வரும் கிராமங்களிலிருந்து இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் 50 விவாசயிகள் கலந்துகொண்டு இயற்கை வேளாண்மை முறையில் பூச்சி நோய்களை கட்டுப்படுத்த பஞ்சகாவ்யா ஜீவாமிர்தம், மீன் அமிலம், ஐந்திலை கரைசல், அமிர்த கரைசல் தேமோர், கரைசல் ஆகியவை தயாரிக்கும் முறை பற்றி செயல்விளக்கத்தோடு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி சாகுபடி செய்வதால் பூச்சி மற்றும் நோய்கள் தாக்குதளின்றி பயிர்கள் நன்றாக வளர்ந்து நஞ்சில்லா தரமான உணவை உற்பத்தி செய்யலாம் எனவும்,
கோழி மற்றம் கால்நடைகள் மரபணு மாற்றப்பட்ட உயிரினம் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து, பயிர்சுழற்சி பசுந்தாள் உரம், பூச்சி நோய் மற்றும் களை நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை பயன்படுத்தி விவசாயம் செய்யலாம் என அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
நிகழ்ச்சியில் அட்மா திட்டம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜாத்தி, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய உழவியல்துறை பேராசிரியார் ஆனந்தகிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்துகொண்டார்.






