என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  டவுன்- பேட்டை சாலையை சீரமைக்க வேண்டும்- மேயரிடம் திருவனந்தல் வழிபாட்டு குழு மனு
  X

  மேயரிடம் மனு அளித்த திருவனந்தல் வழிபாட்டு குழுவினர்.

  டவுன்- பேட்டை சாலையை சீரமைக்க வேண்டும்- மேயரிடம் திருவனந்தல் வழிபாட்டு குழு மனு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுவாமி நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாணத் திருவிழா வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது.
  • தற்போது சேரன்மகாதேவி ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.

  நெல்லை:

  நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனிடம் திருவனந்தல் வழிபாட்டு குழு சார்பாக ஒரு மனு கொடுக்கபட்டுள்ளது.

  அதில் கூறியிருப்பதாவது:-

  நெல்லை டவுன் காந்திமதி அம்மன் உடனுறை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாணத் திருவிழா வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை ) நடைபெற உள்ளது.

  காந்திமதி அம்மனுக்கு, சுவாமி காட்சி தரும் நிகழ்ச்சிக்காக 21-ந்தேதி அன்று காந்திமதி அம்பாள் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி பேட்டை ரோடு வழியாக கம்பை நதிக்கரை காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வார்.

  அதேபோல் 22-ந் தேதி காலை அம்பாளுக்கு காட்சி கொடுப்பதற்காக சுவாமி நெல்லையப்பரும் எழுந்தருளி பேட்டை ரோடு வழியாக காட்சி மண்டபத்திற்கு செல்ல வேண்டும். தற்போது சேரன்மகாதேவி ரோடு (பேட்டைரோடு) குண்டும் குழியுமாக உள்ளதால் சுவாமி சப்பரங்கள் செல்வதற்கும், பக்தர்கள் செல்வதற்கும் இடையூறாக உள்ளது. எனவே மாநகராட்சி சார்பில் போர்கால நடவடிக்கை எடுத்து சாலையை சீர்படுத்தி தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×