என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பம் திருத்தம் செய்ய இன்று கடைசி நாள்
  X

  ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பம் திருத்தம் செய்ய இன்று கடைசி நாள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.
  • ஆகஸ்ட் 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட உள்ளது.

  சேலம்:

  தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியில் சேருவதற்கான முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட உள்ளது.

  பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தாள் -2 தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த தேர்வுகளில் பங்கேற்க விரும்புவோரிடம் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. குறிப்பாக கல்வியல் கல்வி பட்டய, பட்டப்படிப்பு படித்தவர்கள் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

  இந்த நிலையில் விண்ணப்பத்தில் உள்ள விபரங்களில் தவறுகள் உள்ளதாகவும், அவற்றை திருத்தம் செய்ய கால அவகாசம் வேண்டும் என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்தனர். அதை பரிசீலித்து விண்ணப்ப விபரங்களை திருத்த வசதி கடந்த 24-ந்தேதி முதல் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் இன்றுடன் முடிகிறது.

  Next Story
  ×