என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
    X

    ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

    • ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக ராகுல் நாத் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடிக்கு கூடுதல் பொறுப்பாக சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மாற்றுத் திறனாளிகள் நல மேலாண் இயக்குநராக ஏ.கே. கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக என்.சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக ராகுல் நாத் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக செந்தில் ராஜ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஆணையர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் மேலாண் இயக்குநராக வினித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×