என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் மாணவி நந்தினியின் உயர்கல்வி செலவை ஏற்கும் அரசு

    • பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று மாணவி நந்தினி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது.

    பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில் மாணவி நந்தினி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சந்திப்பின்போது மாணவி நந்தினியின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் கூறினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று மாணவி நந்தினி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×