என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளத்தில் புகுந்த அரசு பஸ்சை படத்தில் காணலாம்.
பள்ளத்தில் புகுந்த அரசு பஸ்
- லாரி மீது மோதாமல் இருக்க திரும்பிய போது விபரீதம்
- 50 பயணிகள் உயிர் தப்பினர்
வந்தவாசி:
வேலூரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தவாசி வழியாக மேல்மருவத்தூருக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் கோடீஸ்வரன் ஓட்டினார்.
வந்தவாசி அடுத்த புளிவாய் கிராமம் கூட்டுச்சாலை அருகே அரசு பஸ் வந்து கொண்டிருந்தபோது எதிரே லாரி ஒன்று வேகமாக சென்றது.
லாரி மீது அரசு பஸ் மோதாமல் இருக்க திரும்பிய போது சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் பஸ் புகுந்தது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அலறி அடித்து தப்பித்து வெளியே வந்தனர். பின்னர் மாற்று பஸ்சில் ஏற்பாடு செய்து பயணிகளை பஸ்சில் அனுப்பி வைத்தனர்.
Next Story






