என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்காபிஷேகம் நடைபெற்ற காட்சி.
அவினாசி கோவிலில் 108 சங்காபிஷேக வழிபாடு
- புனித தீர்த்தங்கள் நிரப்பி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம்அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை வாய்ந்த ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது.இக்கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சுவாமிக்கு கோவில் சிவாச்சார்யார்கள் சார்பில் 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாகஇதில் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதா, உள்ளிட்ட புனித தீர்த்தங்கள் நிரப்பி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.இதையடுத்து சுவாமிக்கு அபிஷேக அலங்கார, தீபாராதனை நடந்தது .
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story






