search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.9.31 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
    X

    கோப்புபடம்

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.9.31 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

    • மொத்தம் ரூ.9 லட்சத்து 31 ஆயிரத்துக்கு விற்பனை நடந்தது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
    • ஏலத்துக்கு விவசாயிகள் 463 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    அவிநாசி:

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.9.31 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள் 463 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    இதில், ஆா்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.6,000 முதல் ரூ.7,355 வரையிலும், மட்டரக (கொட்டு ரகம்) பருத்தி குவிண்டால் ரூ.2, 000 முதல் ரூ.3,500 வரையிலும் ஏலம் போனது. ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.9 லட்சத்து 31 ஆயிரம் என விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

    Next Story
    ×