என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
    X

    மருத்துவ முகாமை செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்த காட்சி.

    வெள்ளகோவிலில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

    • வட்டார அளவிலான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது, இந்த முகாமை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.

    முகாமில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்தி, திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல.பத்மநாபன்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ் குமார் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், லக்கமாநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பி. பழனிச்சாமி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் தி.மு.க. நிர்வாகிகள், மருத்துவத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.முகாம் ஏற்பாடுகளை வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி தலைமையிலான மருத்துவக் குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×