search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க பல்கலைக்கழக  மானியக்குழு - கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க பல்கலைக்கழக மானியக்குழு - கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

    • அக்டோபர் 31-ந் தேதி, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை ஊழல் தடுப்பு வாரமாக கொண்டப்படுகிறது.
    • ஊழலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும்.

    திருப்பூர்,அக். 26-

    கல்லூரிகளில் அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்ேததி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க, பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.அக்டோபர் 31-ந் தேதி, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம். ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்த தினத்தையொட்டி, ஒரு வாரம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக, மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் கொண்டாடி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான கருப்பொருள், ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள், தேசத்துக்காக அர்ப்பணியுங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தலைப்பின் கீழ் அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கல்லூரிகளில் கடைபிடிக்க யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.

    அதில், ஊழல் தடுப்பு தொடர்பான கருத்தரங்கம், பயிலரங்கம், பட்டிமன்றம், வினாடி- வினா போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊழலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும். சமூக வலைதளங்கள், குறுஞ்செய்தி, இ மெயில், வாட்ஸ் ஆப் வாயிலாக, விழிப்புணர்வு செய்திகளை சக மாணவர்களிடையே பகிர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×