என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூரிய ஒளி மின் தகடுகள் திருட்டு
    X

    கோப்புபடம்

    சூரிய ஒளி மின் தகடுகள் திருட்டு

    • சூரிய ஒளி மின் தகடுகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.
    • சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சூரிய மின் ஒளி தகடுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே வடுகபாளையம்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன வடுகபாளையம், நாசுவம்பாளையம், அறிவொளி புதூர், ஆகிய கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கிராம மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகளில் உள்ள மோட்டார்களில் சூரிய ஒளி மின் தகடுகள் மூலம் மின்சாரம் தயாரித்து அதன் முலம் மோட்டார்கள் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் சூரிய ஒளி மின் தகடுகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

    இந்தநிலையில் பயன்படுத்தப்படாமல் கிடந்த சூரிய ஒளி மின் தகடுகளை கடந்த சிலநாட்களாக மர்ம நபர்கள் இரவு நேரங்களில் ஒவ்வொரு தகடுகளாக திருடி சென்றுள்ளனர். இதுவரை சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சூரிய மின் ஒளி தகடுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சூரிய ஒளி மின் தகடுகள் திருட்டு குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக ஊராட்சி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. சூரிய ஒளி மின் தகடுகள் திருடபட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×