என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே குப்பை சேகரிப்பு வாகனங்களில் பேட்டரிகள் திருட்டு
    X

    கோப்புபடம்

    பல்லடம் அருகே குப்பை சேகரிப்பு வாகனங்களில் பேட்டரிகள் திருட்டு

    • பழுதான வண்டியையும் பார்த்தபோது அதிலிருந்த பேட்டரி, மற்றும் மோட்டார் காணாமல் போயிருந்தது.
    • 40 மீட்டர் மின் கேபிள் வயர்களையும் மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றுள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சியில் 2 மின்சார எரிபொருள் குப்பை சேகரிப்பு வண்டி உள்ளது. இவற்றில் 1 வண்டி பழுதான நிலையில், ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.மற்றொரு வண்டியை நேற்று காலை பணிக்காக தூய்மை பணியாளர்கள் எடுக்கச் சென்றபோது, அந்த வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து அதன் ஓட்டுநர் வண்டியை சோதித்துப் பார்த்தபோது வண்டியில் இருந்த பேட்டரி, மற்றும் மோட்டார் காணாமல் போனது தெரிய வந்தது. இதையடுத்து பழுதான வண்டியையும் பார்த்தபோது அதிலிருந்த பேட்டரி, மற்றும் மோட்டார் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் இதுகுறித்து மாதப்பூர் ஊராட்சி தலைவர் அசோக்குமாரிடம் தகவல் தெரிவித்தனர்.

    இதற்கிடையே மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லாகவுண்டன்பாளையம்புதூரில் அமைக்கப்பட்டு இருந்த பித்தளை கேட்வால் மற்றும் தொட்டம்பட்டி கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்யும் மின் மோட்டாருக்கு பொருத்தப்பட்டிருந்த 40 மீட்டர் மின் கேபிள் வயர்களையும் மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றுள்ளனர்.

    இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமாரின் அறிவுறுத்தல் படி, மின் மோட்டார் இயக்குனர் முருகன், ராமசாமி, துப்புரவு தூய்மை பணியாளர் ஆனந்த் ரவி ஆகியோர் தனித்தனியே பல்லடம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×