என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் விவகார மோதலில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
    X

    கைதான செல்வகுமார்.

    காதல் விவகார மோதலில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

    • சில நாட்களுக்கு முன் அந்தப் பெண் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனார்.
    • செல்வகுமார் (வயது38) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் கல்லூரி சாலையை சேர்ந்த 23 வயது வாலிபரும், கோவில் வழி பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணும் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்தப் பெண் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெண்ணை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் இருவரும் பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பெண்ணின் ஊர் நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் அவர்கள் இருவரையும் நல்லூர் காவல் நிலையத்திற்கு போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அவர்களைப் பின்தொடர்ந்து பைக் மற்றும் 3 கார்களில் வந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த ஆண் நண்பர், மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த தாக்குதலில் ஈடுபட்ட பல்லடம் அருகே உள்ள கள்ளிமேட்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், கணபதிபாளையம் ஊராட்சி கள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்பவர் மகன் ராமகிருஷ்ணன் (வயது29), அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவரது மகன் விக்னேஷ் (வயது24) ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்படுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று பல்லடம் பனப்பாளையம் பகுதியில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அந்தவழியாக வந்த தலைமறைவாக இருந்த பல்லடம் அருகே உள்ள உகாயனூர் பகுதியை சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரது மகன் செல்வகுமார் (வயது38) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×