search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரவு முழுவதும் போலீசார் தீவிர ரோந்து
    X

     போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காட்சி.

    இரவு முழுவதும் போலீசார் தீவிர ரோந்து

    • முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    • போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தனர்.

    திருப்பூர் :

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் முக்கிய சந்திப்புகள் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தனர்.

    சாலையோர கடைகள் அனைத்தும் மக்கள் தொகை இருப்புக்கு தகுந்தவாறு அனைத்து சாலைகளிலும் சம அளவில் பிரித்து கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் தங்களது சரக்கு பொருட்களை காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாநகரில் இறக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற நேரங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டது.

    தீபாவளியையொட்டி திருப்பூர் பஸ் நிலையம், ரெயில் நிலையம், பிரதான ரோடுகள் என பல இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர். இதையொட்டி ஆயுதப்படை, பயிற்சி போலீசார், பட்டாலியன் போலீசார் என மாவட்டம் முழுவதும் 1100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி விற்பனையையொட்டி நேற்றிரவு முதல் இன்று காலை வரை போலீசார் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பூரில் உள்ள பனியன் தொழிலாளர்கள் பலர் தங்களது வீடுகளை பூட்டி விட்டு சொந்த ஊர்களுக்கு சென்றனர். ஒரு வாரம் கழித்துதான் அவர்கள் திருப்பூர் திரும்புவார்கள். எனவே போலீசார் ஒரு வாரம் வரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். மேலும் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவித்து சென்றால் அந்த பகுதியில் ரோந்து பணியை தீவிரமாக மேற்கொள்ள உள்ளனர்.

    Next Story
    ×