search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கேயத்தில் காணமால் போன சிறுவன் 2 வாரங்களுக்கு பின் பிணமாக மீட்பு
    X

    ரிதன்.

    காங்கேயத்தில் காணமால் போன சிறுவன் 2 வாரங்களுக்கு பின் பிணமாக மீட்பு

    • வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து பி.ஏ. பி., வாய்க்கால் தண்ணீர் செல்வது நிறுத்தப்பட்டது.
    • சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வெள்ளகோவில்:

    காங்கயம், ஏ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(30). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா இவர்களது 3 1/2 வயது மகன் ரிதன் .

    இந்த நிலை இந்த மாதம் பிப்ரவரி 2-ந் தேதி மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ரிதன் மாயமானார்.இந்த புகாரை தொடர்ந்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை யாராவது கடத்தி சென்றுள்ளார்களாக அல்லது அப்பகுதியில் செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் தவறி விழுந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் சிறுவனை தேடி வந்தனர்.

    ஆனால் சி.சி.டி.வி காட்சிகளில் சிறுவன் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், அப்பகுதியில் செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் பி.ஏ.பி வாய்க்காலில் தேடி வந்தனர். இருப்பினும்வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து பி.ஏ. பி., வாய்க்கால் தண்ணீர் செல்வது நிறுத்தப்பட்டது.பின்னர் போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் வாய்க்காலில் தேடியும் சிறுவனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து மீண்டும் ஏ.சி நகர் பகுதியில் வீடு வீடாக சென்று நிலத்தடி தொட்டிகள், புதர்கள் உள்ளிட்ட சந்தேகப்படும் படியான பல இடங்களில் போலீசார் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று வெள்ளகோவில் அருகே வீரசோழபுரம் பகுதியில் செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் அழுகியநிலையில் ஒரு சிறுவனனின் உடல் கிடப்பதாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் வாய்க்காலில் கிடந்த சிறுவனின் பிணம் பிப்ரவரி 2-ந் தேதி காங்கயத்தில் மாயமான 3 வயது சிறுவன் ரிதன் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காங்கயம் பகுதியில் மாயமான 3 வயது சிறுவன் வெள்ளகோவில் அருகே வீரசோழபுரம் பகுதியில் செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் காங்கயம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×